Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 14, 2016

ஜெயலலிதாவின் பிரசாரத்தை அனைத்து பொதுமக்களும் காண புதிய வசதி


அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா பங்கேற்கும் கூட்ட நிகழ்ச்சிகள், அவரது பிரசார பேச்சுகள் பொதுமக்கள் அனைவரையும் சென்றடையும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அகன்ற திரையில் ஒளிபரப்பப்படுகின்றன.
இந்த அகன்ற திரைகளை சுமக்கும் நவீன வாகனங்கள் தமிழகம் முழுவதும் வலம் வருகின்றன.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா திடீரென சென்னையில் உள்ள 16 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஆதரித்து புதன்கிழமை வேன் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவரின் பேச்சை கேட்பதற்காக பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. அனைவரும் பேச்சைக் கேட்க வேண்டும் என்பதற்காக அவரது பேச்சு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட அகன்ற திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இந்த அகன்ற திரைகள் பொருந்தப்பட்ட நவீன வாகனங்கள் ஏற்கெனவே தயார் நிலையில் இருந்தன. இந்த வாகனங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், முக்கிய சந்திப்புகளில் நிறுத்தப்பட்டு ஜெயலலிதாவின் பிரசார பேச்சுகள் ஒளிபரப்பப்பட்டன. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
மேலும், வாகனத்தை சுற்றிலும் அதிமுக அரசின் 5 ஆண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களையும் நேரடியாக ஒளிபரப்புச் செய்வதற்காக இந்த வாகனம் அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட பொதுமக்கள் கூடுமிடங்களில் தயார் நிலையில் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic