தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளுக்கும் போட்டியிடும் 997 வேட்பாளர்களில் 283 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 553 பேர் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்த அமைப்பின் ஒருங்கினைப்பாளர் சுதர்ஷன் சென்னையில் அளித்த பேட்டியில் இத்தகவலை வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது தமிழக சட்டமன்றதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 157 நபர்கள் மீது கடும் குற்ற வழக்குகள் உள்ளன. தனி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரவிச்சந்திரன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. சென்னை திருவொற்றியூர் திமுக வேட்பாளர் கே.பி.சி சாமி மீது ஒரு குற்றவியல் வழக்கும், விளவங்கோடு தொகுதி பா.ம.க வேட்பாளர் ஹரிஹரன் மீது ஒரு குற்றவியல் வழக்கும் உள்ளன.
திமுக சார்பில் போட்டியிடும் 170 வேட்பாளர்களில் 40 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதிமுக சார்பில் போட்டியிடும் 221 வேட்பாளர்களில் 36 பேர் மீது வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 37 வேட்பாளர்களில் 8 பேர் மீதும், பா.ஜ.க வின் 15 வேட்பாளர்கள் மீதும், தேமுதிக சார்பில் 18 பேர் மீதும் வழக்குகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:
Write comments