நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் புஸ்ஸி ஆனந்த் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் நடுநிலையை வகிக்க முடிவு செய்துள்ளது. அதாவது எந்தக்கட்சிக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை. அதே சமயம் விஜய் ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம்.
ஆனால், விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ, பயன்படுத்தக் கூடாது. இந்த நிலைபாட்டை நான் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை நேரில் அழைத்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தெளிவுபட கூறி இருக்கின்றேன். மேலும் இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறேன்.
இந்நிலையில் சில ஊடகங்களில் விஜய் மக்கள் இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளித்தது போல் செய்திகள் ஒளிபரப்பபடுகின்றன. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே விஜய் ரசிகர்கள் எந்தவித குழப்பமும் இல்லாமல் தங்கள் விருப்பம்போல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தங்கள் விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments