Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 10, 2016

பணத்தை நம்பியே தேர்தலை சந்திக்கும் அதிமுக - பா.ஜ.க குற்றச்சாட்டு

பணத்தைக்கொண்டே அதிமுக இத்தேர்தலில் களமிறங்கியுள்ளதாக பா.ஜ.கவின் மூத்த தலைவர் முரளிதர ராவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் அண்ணாநகர் தொகுதிக்குட்ட அமைந்தகரையில் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய அவர், அதிமுக அரசு மக்களை நம்பாமல் பணத்தை மட்டும் நம்பியே இந்த தேர்தலை சந்திக்கிறது. ஏழை எளிய மக்களை குறிவைத்து அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. பணம் கொடுத்தாலும் மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்.


கடந்த 5 வருடத்தில் தாங்கள் கொள்ளையடித்த பணத்தில் சிறியதை மக்கள் தங்களுக்கு ஓட்டுப்போடவேண்டுமென்பதற்காக செலவழிக்கிறார்கள். மக்கள் அப்பணத்தை அவர்களிடமிருந்து பெற்றாலும் அவர்கள் அதிமுகவிற்கு ஓட்டு போடமாட்டார்கள். இந்த தேர்தலில் தமிழக மக்கள் அதிமுகவிற்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். அதிமுகவின் தேர்தல் அறிக்கை தண்ணீரில் எழுதப்பட்டவை அதை மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், இத்தேர்தலில் பா.ஜ.க கணிசமான வெற்றியை பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic