தமிழக சட்டமன்றத்தேர்தலை ஒட்டி பெரும் பெரும் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சார யுக்தியாக தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து வருகினறனர். திமுக சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் ஆளுங்கட்சியை சாடியும், அதிமுக வெளியிடும் விளம்பரங்களில் ஆளுங்கட்சியை புகழ்ந்தும் குறும்படம் போல் விளம்பரங்கள் டி.விக்களில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கிறது.
இதில் வேடிக்கை என்னவெனில் இந்த இரு விளம்பரங்களிலும் நடித்தது ஒரே பார்டியான கஸ்தூர் பாட்டி தான். அந்த விளம்பரங்கள் மக்களை சென்றடைகிறதோ இல்லையோ, கஸ்தூரி பாட்டி இப்ப ரொம்ப பிரபலமாகிவிட்டார். செய்தியாளர்களை அவரை சந்தித்து என்ன இப்படி இரண்டு கட்சிக்காகவும் விளம்பரத்தில் நடித்துவிட்டீர்களே? என கேட்டதற்கு வெகுளியாய் விழிக்கிறார்.
சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடத்தி வருகிறேன். இப்போது குறும்படங்களிலும் நடித்து வருகிறேன். ஏஜன்ட் அழைத்ததால் குறும்படம் என நினைத்து அதிமுக விளம்பரத்தில் நடித்துவிட்டேன். நான் எந்த கட்சியையும் சாந்தவள் இல்லை. எனக்கு யாரு ஜெயிச்சாலும் சந்தோஷம்தான். அதிமுக விளம்பரத்தில் நடித்ததற்காக ரூ 1500, திமுக விளம்பரங்களில் நடித்ததற்காக ரு 1000 கிடைத்தது என கூறினார்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவெனில் எதிர் கட்சியின் விளம்பரத்தில் நடித்துள்ளார் என்பதை கூட கவனிக்காமல் அதே பாட்டியை தங்கள் கட்சியின் விளம்பரத்திற்கு நடிக்க கூப்பிட்டதுதான் ஹைலைட்.

No comments:
Write comments