தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும், 2011 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தேமுதிக கட்சி எம்.எல்.ஏவாகவும் கட்சியின் கொறடாவாகவும் முக்கிய ஆளாக இருந்த சந்திரகுமார் கட்சியின் தலைமைக்கு நெருக்கடி கொடுத்ததன் விளைவாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விஜயாகாந்த் அவரை நீக்கினார்.
2016 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியோடு சேருவது என விஜயகாந்த் முடிவெடுத்ததும் "இந்த முடிவு தற்கொலைக்கு சமமானது, கேப்டன் விஜயகாந்த் உடனே தமது இந்த நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதிமுகவை தோற்கடிக்க வேண்டுமெனில் திமுகவுடன் சேர்வதே சிறந்தது" என பத்திரிகையாளகள் மூலமாக விஜயாந்திற்கு செய்தி அனுப்பினார். இருப்பினும் இதைப்பற்றி சட்டை செய்யாத விஜயகாந்த் சந்திரகுமார் உட்பட அவரோடு பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்த அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினார்.
இதனையெடுத்து இரவோடு இரவாக மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை துவக்கி திமுகடோடு கூட்டணி வைத்து 3 தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றிலும் தோல்வியை தழுவியது. அவர்களுக்கு இரண்டாம் இடமே கிடைத்தது. தற்போது செய்தியாளர்களிடத்தில் பேசிய சந்திரகுமார் " நான் ஏற்கனவே கூறியது போல தேமுதிக படுதோல்வி அடைந்துவிட்டது, இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் பலரும் தலைமையின் மேல் அதிருப்தியில் உள்ளனர். அவர்களில் நிறைய பேர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகின்றனர். விரைவில் அவர்களை ஒன்றினைத்து மக்கள் தேமுதிகவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்குவோம் என்று தெரிவித்தார். அப்படியானால் தேமுதிகவிற்கு இன்னும் பேரிழப்பு காத்துக்கொண்டிருக்கிறது என்பதே சந்திரகுமாரின் பேட்டியிலிருந்து தெரிகிறது.

No comments:
Write comments