தேமுதிக+ம.ந.கூ+ தா.ம.க என்ற பிரம்மாண்ட பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து கடைசியில் அனைவரும் குப்பிற விழுந்து மண்னை கவ்வினார்கள். தேர்தலுக்கு பிறகும் எங்களுது கூட்டணி தொடரும், உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் இணைந்தே போட்டியிடுவோம் என்று மக்கள் நலக்கூட்டணி ஒருங்கினைப்பாளர் வைகோ தெரிவித்திருந்தார்.
விஜயகாந்த தனது கட்சியின் செயலாளர்களை அழைத்து தோல்விக்கான காரணங்களை கண்டறிய முற்படும்போது, அக்கட்சியினர் அனைவரும் ஒற்றைக்கருத்தாக தவறான கூட்டணியில் இணைந்ததுதான் தோல்விக்கு முக்கிய காரணம் என்றார்களாம். எந்நேரத்திலும் தேமுதிக கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என்கிற செய்தி வந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது விடுதலை சிறுத்தை கட்சியும் வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தோல்விக்கான முக்கிய காரணம், மக்கள் நலக்கூட்டணி மேல் மக்களுக்கு இருந்த சந்தேக கேள்விகளுக்கு விடை கொடுக்காமல் போனதன் விளைவே தோல்வியடைய காரணம் என்று கருதுகிறதாம் விசிக. வைகோ அதிமுகவிற்கு மறைமுக சாதகமாக செயல்படுகிறார், அதிமுகவின் பி டீமே மக்கள் நலக்கூட்டணி என்ற குற்றச்சாட்டு வைத்தப்போது அதற்குண்டான முறையான விளக்கம் கொடுக்கப்படவில்லை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் மேடைகளில் நடந்து கொண்ட விதமும் மக்களுக்கு முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வெகுளியா அவர் பேசுகிறார் என்ற தங்களது தரப்பில் எடுத்துவைக்கப்பட்ட காரணங்கள் மக்களிடம் எடுபடவில்லை என்றே விடுதலை சிறுத்தைகள் கட்சி கருதுவதாக தெரிகிறது.
இனி அந்த கூட்டணி நிலைத்திருப்பது கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றவகையில் கூட்டணியிலிருந்து வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிடப்போவதாக தெரிகிறது.

No comments:
Write comments