ஈரான் நாட்டிற்கு இரண்டு நாள் அரசு பயணமாக சென்றிருக்கும் அவர் அங்கே சீக்கிய குருதுவாராவில் பங்கேற்று வழிபாடு நடத்தினார். அவர் பேசும் போது எல்லா மக்களோடும் இணக்கமாக பழகும் மனப்பாங்கு கொண்டவர்கள் இந்தியர்கள். குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் எந்த நாட்டு மக்களோடு எளிதில் பழகிவிடுவார்கள். இது அவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் தன்மையாகும். அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து மனித சமுதாயத்திற்கு சேவையாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஈரான் அதிபர் உட்பட உயர்மட்ட தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்யவிருக்கிறார். பின்னர் சபாஹர் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா - ஈரான் - ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. இத்துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா 200 பில்லியன் டாலர்களை ஈரானுக்கு வழங்க இருக்கிறது.

No comments:
Write comments