Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 23, 2016

பா.ஜ.க நாட்டில் நல்ல வளர்சியை அடைந்துள்ளது - வெங்கையா நாயுடு


சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலின் முடிவுகளை காணும்போது பா.ஜ.க நல்ல வளர்சியை அடைந்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கேரளா மற்றும் மேற்குவங்காளத்தில் பா.ஜ.க தனது வெற்றிக்கணக்கை துவங்கியுள்ளது, அஸ்ஸாமில் முதன்முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.  தேர்தல் நடைபெற்ற அனைத்து மாநிலங்களில் பா.ஜ.கவிற்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்த வெற்றிக்கான காரணம் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் சென்றிருப்பதேயாகும்.

இந்த தேர்தல் மூலம் நாங்கள் கற்று கொண்ட பாடம் என்னவென்றால், எங்கெல்லாம் கூட்டணி சாத்தியப்படுகிறதோ அங்கெல்லாம் கூட்டணி வைத்து மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதேயாகும். இன்று பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்தியாவில் 15 மாநிலங்களில் ஆட்சி செய்கின்றது. 45% பகுதியை பா.ஜ.கவே ஆள்கிறது. எனவே கூட்டணி வைத்ததால் தான் காங்கிரஸ் அஸ்ஸாமில் தோல்வியுற்றது எனக்கூறும் நிதிஷ்குமாரின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

காங்கிரஸ் ஊழல் கட்சியாக திகழ்ந்து வருகிறது. அவர்களால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. இந்த நாட்டில் காங்கிரஸ் கட்சி ஓரங்கட்டப்பட்டு வருகிறது. சோனியாவால் தான் அக்கட்சி இன்று ஒன்றுபட்டு இருக்கிறது இல்லையென்றால் எப்பொழுதோ சிதைந்து போயிருக்கும். அதற்காக குடும்ப அரசியலை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic