1945 இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. அமெரிக்காவின் "பியர்ல் ஹார்பர்" துறைமுகத்தாக்குதலுக்கு பழிவாங்குவிதமாக அதே ஆண்டும் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரத்தின் மீது முதன் அணுகுண்டை வீசியது. இதில் 40,000ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பின்னர் அடுத்த மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9ஆம் தேதி மற்றொரு துறைமுக நகரமான நாகசாகி மீது மற்றொரு அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இதில் 80,000 மக்கள் கொல்லப்பட்டனர். 75% மேலான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதனால் பெரும் நஷ்டத்திற்கு ஆளான ஜப்பான் ஆக்ஸ்ட் 15ஆம் தேதி அமெரிக்காவிடம் சரணடைந்தது.
இவ்விரண்டு நகரங்களிலும் நடைபெற்ற அணு குண்டு தாக்குதலால் ஜப்பான் நாடு நிலை குழைந்து போனது. இன்று வரை அணுகுண்டு வீசியதற்கான பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருவதாக ஜப்பான் ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால் இதுவரை அமெரிக்க அதிபர் யாரும் பாதிக்கப்பட்ட அந்த நகரத்தை நேரில் சென்று கண்டதில்லை. முதல் முறையாக யு7 உச்சி மாநாடு டோக்கியோவில் நடக்கவிருக்கிறது. இதில் கலந்து கொள்ளச்செல்லும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஹிரோஷிமா நகரத்தையும் பார்வையிடுவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால் அணுகுண்டு வீச்சிற்காக தான் மன்னிப்பு கோரப்போவதில்லை என ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

No comments:
Write comments