Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 4, 2016

கருப்பு பணம் எவ்ளோ இருக்குன்னே தெரில - மத்திய அரசு

வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணம் எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை எனவும் அதனை மதிப்பீடு செய்யவும் இயலாது என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெய்ந்த் சின்ஹா கூறியதாவது, இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்து தொடந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டம் மற்றும் அமலாக்கத்துறையினர் இது தொடர்பாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். முக்கியமாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் இதில் ஈடுபட்டு வருகிறது. எனவே வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணம் எவ்வளவு என்பதை வரையறை செய்து கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இத்தாலி வங்கியைச் சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச அளவில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணம் குறித்து ஆய்வு செய்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தின் மதிப்பு சுமார் 10 லட்சக் கோடியிலிருந்து 12 லட்சம் கோடி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதையை பா.ஜ.க அரசு இதற்கு முன் எதிர்கட்சியாய்  செயல்பட்டுகொன்டிருந்த காலத்திலிருந்து அப்போதைய மத்திய அரசான காங்கிரஸை கருப்பு பண விவகாரத்தில் கடுமையாக விமர்சனம் செய்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரே வருடத்தில் அனைத்து கருப்பு பணங்களும் மீட்கப்படும் என்று உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic