சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் சென்னை வந்துள்ளனர். தமிழகத்தில் வருகின்றன் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் தாக்கப்பட்டு இறுதியாக 3794 பேர் களத்தில் போட்டியிடுகின்றனர். இதை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. வருகிற 5–ம் தேதி முதல் வீடுதோறும் தேர்தல் கமிஷன் சார்பில் பூத் சிலிப்கள் விநியோகம் செய்யப்படுகிறது. ஓட்டுப்பதிவுக்காக தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் மொத்தம் 66,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவை அமைதியாக நடத்தவும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குப்பதிவு செய்யவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை என ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.
அந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க துணை ராணுவ படையினர் வரவழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 52 கம்பெனி துணை ராணுவ படையினர் 16 சிறப்பு ரெயில்கள் மூலம் தமிழகம் வருகிறார்கள். மேற்கு வங்காளத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 6 கம்பெனி துணை ராணுவ படையினர் நேற்று முன்தினம் 2 ரெயில்களில் சென்னை வந்தனர். அவர்கள் கடற்கரை ரெயில் நிலையத்தில் தங்கியுள்ளனர்.
அவர்களில் 2 கம்பெனி ராணுவத்தினர் புதுச்சேரி அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று 6 ரெயில்களில் 18 கம்பெனி துணை ராணுவ படையினர் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்தனர். இன்னும் அடுத்த சில நாட்களில் மேலும் 14 கம்பெனி துணை ராணுவத்தினர் சென்னை வருகிறார்கள். அவர்கள் திருச்சி, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு தேர்தல் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சென்னையில் 406 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவத்தினர் நிறுத்தப்பட உள்ளனர். தமிழகம் வந்துள்ள துணை ராணுவப்படையினர் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Write comments