Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 7, 2016

நான் நலமாக உள்ளேன்: வதந்தியை நம்ப வேண்டாம் - நடிகர் செந்தில் பேட்டி

நடிகர் செந்தில் மரணமடைந்துவிட்டதாக வதந்தி கிளம்பியதால் தமிழ்த் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து வீடியோ பேட்டி ஒன்றில் நடிகர் செந்தில் கூறியதாவது:

நான் நலமாக உள்ளேன். என் ரசிகர்களும் நலம் விரும்பிகளும் நேற்று இரவில் இருந்து பரபரப்படும் வதந்திகளை நம்பவேண்டாம். உங்கள் ஆதரவு எப்போதும் தேவை என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.


செந்தில் பிரசாரத்தில் மோதல்:

மதுரை மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் கே.ராஜூவை ஆதரித்து நடிகர் செந்தில் சோலைஅழகுபுரத்தில் புதன்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள திமுக தேர்தல் அலுவலகம் அருகே பிரசாரம் செய்துவிட்டு சென்ற நடிகர் செந்திலுக்கு திமுகவினர், உதயசூரியன் சின்னத்தை காட்டினராம். இதனால் அதிமுகவினர், திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவ்வழியாக வந்த திமுக வட்டச் செயலர் காவேரியின் கார் அதிமுக தொண்டர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை இடித்துவிட்டுச் சென்றதாம்.

இதையடுத்து ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையம் எதிரே உள்ள காவேரியின் வீட்டுக்குச் சென்று அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரமைடந்த திமுகவினர், அதிமுகவினர் மீது சரமாரியாக கற்களை வீசியுள்ளார். அதில், சில கற்கள் ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய பலகையில் விழுந்ததில் பலகை சேதமடைந்தது.

இதுதொடர்பாக அதிமுக மாமன்ற உறுப்பினர் வீரணன் அளித்தப் புகாரின் பேரில், போலீஸார், திமுக பகுதிச் செயலர் முருகானந்தம், வட்டச்செயலர்கள் காவேரி, சந்திரன், வாசு, பழனி, நிர்வாகிகள் செந்தில், சுந்தர், மணி உள்பட 18 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இதில், சந்திரன், வாசு, பழனி, சுந்தர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

இதனையடுத்து செந்தில் உடல்நிலை தொடர்பாக வதந்தி உருவானது. இதனால் அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic