Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 20, 2016

அவசரபட்டுட்டோமோ...! மமக கட்சி உள்ளக்குமுறல்



திமுகவுட கூட்டணி வைத்து 4 தொகுதிகளில் போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி அனைத்திலும் தோல்வியை சந்தித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்த தேர்தலில் போட்டியிட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற ம.ம.க 3 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளை வென்றது. இதன் மூலம் முதன்முறையாக அக்கட்சியின் தலைவர்கள் ஜவாகிருல்லாஹ் மற்றும் அஸ்லம் பாஷா ஆகியோர் சட்டமன்றத்திற்குள் முதன்முறையாக காலடி எடுத்துவைத்தனர்.

2014ஆம் ஆண்டு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும், இடையில் நடந்த ராஜ்யசபா எம்.பிக்கு வாக்களிக்கும் தேர்தலிலும் திமுக பக்கம் சாய்ந்தது ம.ம.க. இதனிடையே சட்டமன்ற தேர்தலிலும் ம.ம.க திமுகவின் அணியிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு முன்பு முஸ்லிம் சிறைவாசிகள் தொடர்பாக ம.ம.கவின் தாய்கழகமான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தை கோவையில் நடத்தினார்கள். அதில் பேசிய ஜவாகிருல்லாஹ் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி வெற்றி பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் இப்போராட்டத்தை நடத்துகிறோம் என அதிமுக அணியில் இடம்பெருவதற்கு துண்டைப்போட்டார்.

தேர்தல் நெருங்கும்வேலையில் தீடீரென திமுகவின் பக்கம் சாய்ந்தது ம.ம.க. தங்களின் வெற்றிக்கு இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி அவசியம் என்கிற ரீதியில் அன்போடு அரவனைத்து ம.ம.க எதிர்பார்த்திராத வகையில் 5 தொகுதிகளை ஒதுக்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் சில நாட்களிலேயே தங்களக்கு 4 தொகுதிகள் போதும் என்கிற ரீதியில் உளுந்தூர் பேட்டை தொகுதியை திமுக வசம் திருப்பி கொடுத்தது ம.ம.க.

மீதமுள்ள 4 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி கண்டு அதிர்ச்சியுள் உள்ளது அக்கட்சி. இதனால் அக்கட்சியின் சார்பில் இந்த முறை ஒருவர் கூட சட்டமன்றத்திற்கு செல்லவில்லை. அதே சமயம் அக்கட்சியிலிருந்து பிரிந்து மனித நேய ஜனநாயக கட்சி என்று புதிய கட்சி துவங்கிய தமீம் அன்சாரி அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் அவர்களுக்கு பெருத்த கவலை அளிப்பதாக உள்ளது. தாங்கள் தவறான கூட்டணியோடு இணைந்துவிட்டோமொ என்று அக்கட்சியின் நிர்வாகிகள் கருதுவதாக செய்திகள் வெளியாகிறது. முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட்ட 5 தொகுதிகளில் கடையநல்லூர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic