Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 12, 2016

சிக்கியது கையளவு! சிக்காததது கடல் அளவு!

என்ன இது? பழமொழியே மாத்திட்டீங்களே!  என்று யோசிக்கிறீர்களா? காலத்திற்கு ஏற்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாத்த வேண்டியதுதானே?

ஆம்! தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், தேர்தல் ஆணையமும் ரெக்கை கட்டி சுழன்று அடிக்கிறது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு முறையான ஆவணம் இல்லாமல் எக்கச்சக்க பணம் சிக்கியுள்ளது. இதுவரை 100 கோடிக்கு மேல் சிக்கியுள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது தொடக்கத்தில் ஒரு தொகுதிக்கு மூன்று பறக்கும் படையினரை நியமித்து கண்காணித்து வந்தோம், தேர்தல் தேதி நெருங்குவதால் பணப்பட்டுவாடா அதிக நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து  பறக்கும் படையினரின் எண்ணிக்கையை ஒவ்வொரு தொகுதியிலும் அதிகரித்துள்ளோம்.

இரவு பகல் பாராமல் கண்விழித்து சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 100 கோடிக்கு மேல் பணம் சிக்கியுள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தான் அதிக பணம் சிக்கிள்ளது. இதுவரை சிக்கியதே கோடியை தொட்டுள்ளது, எங்களுடைய கவனித்திற்கு கொண்டு வரப்பட்டு, நாங்கள் சோதனை நடத்தி பறிமுதல் செய்தவை, எங்களுடைய பார்வைக்கு வராமல் நடைபெற்றிருக்கும் பரிமாற்றங்கள் பல ஆயிரம் கோடியை தொட்டிருக்கும் என்கிறார் ராஜேஷ்.

பணம் பறிமுதலில், சென்னை முதலிடத்தை பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில், அதிகபட்சமாக சென்னையில், 24.76 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 12.05 கோடி ரூபாய், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கரூர் மாவட்டத்தில், 8.93 கோடி ரூபாய் சிக்கியுள்ளது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தேர்தல் கமிஷன் நடவடிக்கையில், 35.53 கோடி ரூபாய் சிக்கியது. 2014 லோக்சபா தேர்தலில், 25.05 கோடி ரூபாய் சிக்கியது. ஆனால், இந்திய தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் இம்முறை, 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic