Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 9, 2016

"நீங்களும் உங்க கூட்டமும்" அப்பீட்டாகிய அமித்ஷா

பா.ஜ.கவின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று பரமக்குடி, திருப்பூர், கோவை ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று கூறப்பட்டிருந்தது ஆனால் பிரச்சாரத்தினை ரத்துசெய்துவிட்டு டெல்லி சென்றுவிட்டார். இது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட செய்தியானது,


பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மத்தியிலிருந்து பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா, பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையா நாயுடு போன்றோர் தமிழகம் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்றும் எதிர்பார்த்த அளவு மக்கள் கூட்டம் கூடாததாலும், தமிழக பா.ஜ.கவின் நிர்வாகத்திற்குள் குளருபடி ஏற்பட்டு கோஷ்டியாக செயல்படுவதினாலும் அமித்ஷா தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டி மோடியின் கல்வி தகுதி தொடர்பாக புதுடெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார்.

சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அநேக இருக்கைகள் காலியாக கடந்தனவாம். பிரதமர் இந்தியில் உரையாற்றியதால் பாஷை புரியாமல் வந்திருந்தவர்களில் கூட பல பேர் எழுந்து சென்றுவிட்டனர். இதனையடுத்து கூட்டத்திற்கு பின் தமிழக நிர்வாகிகளிடம் கூட்டத்திற்கு சரியான திட்டமிடுதல்  இல்லை என பிரதமர் கடிந்து கொண்டார். மேலும் அமித்ஷாவும் கடந்த வாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொண்ட பிரச்சாரத்திலும் இதே நிலை இருந்ததால் மாநில நிர்வாகிகளிடம் ரொம்பவே கடிந்து கொண்டாராம். இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தை ரத்து செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பா.ஜ.க நிர்வாகிகள் பெரும் கலக்கத்தில் இருக்கின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic