Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 4, 2016

கடனை திருப்பதராதவரெல்லாம் குற்றவாளி அல்ல - கட்கரி

கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்களையெல்லாம் திருடர்களாக கருத முடியாது என மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்திய வங்கிகளில் சுமார் 9ஆயிரம் கோடிவரை கடன் வைத்து விட்டு கடனை திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்ற விஜய் மல்லையா குறித்து நாடு முழுவதும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சரின் இந்த கூற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் மல்லையா இந்தியா திரும்பவும் அவரிடமிருந்து கடனை வசூலிக்கவும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய அமைச்சர் கட்கரி "கடனை திரும்பச் செலுத்தாத அனைவரையும் ஏமாற்றுக்காரர்கள் என முத்திரை குத்த முடியாது. அவர் மீதான் நீதிமன்ற நடவடிக்கை சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது. அரசு சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையு மேற்கொள்ளும் என்று கட்கரி கூறியுள்ளார்.

கடன் வாங்கியவர்களின் நிறுவனம் வட்டிகளை முறையாக செலுத்தி வருகிறது என்றால் அந்த நேரத்தில் மக்களும் சரியான நிறுவனம் என்று குறிப்பிடுகின்றனர். ஆலோசகர்களும் மேலாளர்களும் நல்ல நிறுவனம் என்று குறிப்பிடுகின்றனர். ஏதாவது ஒரு நிறுவனம் சிக்களுக்குள்ளாகும்போது அனைத்து நிறுவனங்களுமே இப்படித்தான் என்று கூறத்தொடங்கி விடுகின்றனர்.

சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவாக உள்ளது. குறிப்பாக சீனாவின் பொருளாதாரம் சரிவில் உள்ளது. ஒட்டுமொத்தமாக தொழில்துறை வளர்ச்சி சிறப்பாக இல்லை. ஆனாலும் உள்கட்டமைப்பு, சிமென்ட், உருக்கு உற்பத்தி துறைகளில் மத்திய அரசு தலையிட்டு தொழில்துறை வளர்ச்சிக்கு உதவுகிறது.

எல்லாம் சரியான நிலையில் இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்த நிலையை மேம்படுத்தும் முயற்சிகளில் உள்ளோம். வங்கிகளின் நிலையும் தற்போது நல்ல நிலைமையில் இல்லை. கடன்கார்களை ஆராய்கிறபோது ஒன்று நியாயமான தவறு அல்லது நியாயமில்லாத தவறு என்பதை பார்க்க முடிகிறது. பொதுவாக நேர்மையான மேம்பாடு சார்ந்த அணுகுமுறை கொள்ள வேண்டும். இந்த நிலையில் நியாயமான நிலையில் பணம் கட்டத் தவறியவர்களுக்கு அரசு உதவும். நேர்மையல்லாத முறையில் பணம் கட்ட தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்கரி குறிப்பிட்டார்.

ஆனால் அதே சமயத்தில் நமது தேசத்தில் மட்டுமே கடன் வாங்கிய பெரும் முதலாளிகள் திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வது வெறும் 15ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய ஏழை விவசாயி கடனை திருப்ப செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்வதும் அல்லது வங்கி அதிகாரிகளின் புகார்களினால் காவல்துறையினரால் கடுமையாக நடத்தப்படும் சூழல் நிலவிவருகிறது என்பதே எதார்த்தம்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic