வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது தொடுக்கப்பட்டிருந்த வழக்கிலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் விடுவித்தது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி முதல் இறுதி வாதம் நடந்து வருகிறது. கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே மற்றும் ஆச்சார்யா ஆகியோர் வாதத்தை முன்வைத்தனர்.
ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் வாதிட்டார். கடந்த மாதம் 27ஆம் தேதி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் நாப்டே தனது வாதங்களை முன்வைத்தார். இதை தொடர்ந்து வழக்கு மே 3ஆம் தேதியான இன்று ஒத்துவைக்கப்பட்டது. இன்று கோர்ட் ஆரம்பித்தது, சிறிது நேரம், சேகர் நாப்டே வாதாடினார். அதன் பின் கர்நாடக தரப்பில் ஆச்சார்யா பதில் வாதத்தை எடுத்துவைத்தார்.
ஜெயலலைதா தரப்பு வாதம் நிலைக்காது என்றும் சொத்து குவிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது என்று ஆச்சார்யா வாதாடினார். நாளையும் தொடர்ந்து ஆச்சார்யா வாதாடவுள்ளார். வியாழக்கிழமை வரை கர்நாடக தரப்பு தனது பதில் வாதத்தை முன்வைக்கும் என்று ஆச்சார்யா தெரிவித்துள்ளார். கர்நாடக தரப்பு வாதம் வருகின்ற வியாழக்கிழமை முடிவடைந்ததும் தீர்ப்பு தேதியை நீதிபதிகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
ஜெயலலிதா தரப்பு வாதம் நிலைக்காது, சொத்து குவிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது என்று ஆச்சாரியா வாதம் முன் வைத்தார். இன்று வாதம் செய்த ஆச்சாரியா நாளையும் தொடருகிறார். வியாழக்கிழமைவரை கர்நாடக தரப்பு தனது பதில் வாதத்தை முன் வைக்கும் என்றும் ஆச்சாரியா கூறியுள்ளார். கர்நாடக தரப்பு வாதம் வியாழக்கிழமை முடிவடைந்ததும், தீர்ப்பு தேதியை நீதிபதிகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இவ்வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. குன்ஹா தலைமையில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவித்து சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு சென்ற போது நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா குற்றமற்றவர் என விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி முதல் இறுதி வாதம் நடந்து வருகிறது. கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே மற்றும் ஆச்சார்யா ஆகியோர் வாதத்தை முன்வைத்தனர்.
ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் வாதிட்டார். கடந்த மாதம் 27ஆம் தேதி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் நாப்டே தனது வாதங்களை முன்வைத்தார். இதை தொடர்ந்து வழக்கு மே 3ஆம் தேதியான இன்று ஒத்துவைக்கப்பட்டது. இன்று கோர்ட் ஆரம்பித்தது, சிறிது நேரம், சேகர் நாப்டே வாதாடினார். அதன் பின் கர்நாடக தரப்பில் ஆச்சார்யா பதில் வாதத்தை எடுத்துவைத்தார்.
ஜெயலலிதா தரப்பு வாதம் நிலைக்காது, சொத்து குவிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது என்று ஆச்சாரியா வாதம் முன் வைத்தார். இன்று வாதம் செய்த ஆச்சாரியா நாளையும் தொடருகிறார். வியாழக்கிழமைவரை கர்நாடக தரப்பு தனது பதில் வாதத்தை முன் வைக்கும் என்றும் ஆச்சாரியா கூறியுள்ளார். கர்நாடக தரப்பு வாதம் வியாழக்கிழமை முடிவடைந்ததும், தீர்ப்பு தேதியை நீதிபதிகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இவ்வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. குன்ஹா தலைமையில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவித்து சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு சென்ற போது நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா குற்றமற்றவர் என விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments