Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 1, 2016

நான் அதிபரானால்...

அடுத்து வரக்கூடிய அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிடவிருக்கும் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரும் தொழிலதிபரான டொனால்டு டிரம்ப் அமெரிக்க முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனக்கான ஆதரவை திரட்டி வருகிறார். பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வரும் டொனால் டிரம்ப் சமீபத்தில் தான் அதிபர் ஆனால் பின்லேடன் ஒழிந்திருந்து இடத்தை அமெரிக்காவிற்கு தெரிவித்து கொடுத்த டாக்டரை பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிப்பேன் என தெரிவித்துள்ளார்.

சர்வதேச தீவிரவாதியான அல் கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க சீல் படையினர் நடத்திய அதிரடி ஆபரேஷனில் பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டான். பின்லேடன் அங்கு தங்கி இருப்பதை பலமுறை உளவுப் பார்த்த பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர் ஷகீல் அப்ரிடி என்பவர் அமெரிக்க உளவுப்படைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் ஜெரோமிக்கா’ மூலமாகதான் அவனை தீர்த்துகட்ட அமெரிக்காவால் முடிந்தது என நம்பப்படுகிறது.

டாக்டர் அப்ரிடிமீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர்ந்துள்ள பாகிஸ்தான் அரசு அவரை சுமார் ஐந்தாண்டுகளாக சிறையில் அடைத்து வைத்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் அதிபராக நான் பதவியேற்றால் தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் இருப்பிடம் பற்றி அமெரிக்க உளவுப்படைக்கு தகவல் அளித்ததற்காக பாகிஸ்தான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள டாக்டரை இரண்டே நிமிடத்தில் சிறையில் இருந்து விடுதலை செய்வேன் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic