குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பத்திரிகையாளரை சந்தித்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்காகன் சூழல் உருவாகியிருக்கிறது. திமுக, அதிமுக இவைரெண்டையும் தவிர்த்து பல வருடங்களுக்கு பிறகு மற்ற கட்சி ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதே சமயத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு சக்திவாய்ந்த ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் வைகோ ஒரு குழப்ப அணியையே உருவாக்கியுள்ளார். இதன் மூலம் வைகோ விஷப்பரிட்சையே மேற்கொண்டுள்ளார் இவர்களை பார்த்து நாடே சிரிக்கிறது என கடுமையாக விமர்சனம் செய்தார்.
மக்கள் நலக்கூட்டணியில் கைகோர்த்திருக்கும் அனைத்து கட்சிகளும் சந்தர்பவாத கூட்டணி என்றும் இதனால் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை என்றும் கூறினார். இந்த முறை நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை. தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சியின் எழுச்சியை காண முடிகிறது. தேர்தல் முடிந்த பின்பு பா.ஜ கட்சியுடன் கூட்டணி அமைக்க தயங்கிய அனைத்து கட்சிகளும் பின்னர் வருதப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Write comments