தேர்தலில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில்தான் பணப் புழக்கம் அதிக அளவில் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறினார்.
சென்னையில் அவர் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:-
தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகள். ஒவ்வொரு கட்சியிலும் தொழிலாளர்களுக்கு என தனி அமைப்பு இருக்கிறது. அவர்களின் நலன் காக்கும் அரசியலை நாங்கள் ஏற்கிறோம்.தேர்தலில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில்தான் பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. இந்தப் பண ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவது என்பது தேர்தல் ஆணையத்துக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.

இதைச் சமாளித்து, தேர்தலை எப்படி நேர்மையான முறையில் சமாளிக்கப் போகிறது என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.
மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களின் நலனைக் காக்க தமிழக அரசு தவறிவிட்டது. இந்திய பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது. "மேக் இன் இந்தியா', "ஸ்டார்ட் அப் இந்தியா', "ஸ்டேண்ட் அப் இந்தியா' என்பதெல்லாம் வார்த்தை ஜாலங்கள்தான்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என்ற வாக்குறுதியை மோடி நிறைவேற்றவில்லை. கார்ப்பரேட், தொழில் நிறுவன முதலாளிகளுக்காகவே சட்டத் திருத்தம் செய்யப்படுகிறது. விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது என்றார்.

No comments:
Write comments