Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 2, 2016

ஓட்டு கேட்டு எங்க ஊருக்கு வரக்கூடாது - செருப்பை கொண்டு எச்சரித்த மக்கள்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் பழனியப்பன் போட்டியிடுகிறார். வாக்குசேகரிப்பதற்காக நத்தமேடு கிராமம் சென்ற அவருக்கு மக்கள் செருப்பை எறிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அமைச்சர் எங்கள் கிராமத்திற்கு இதுவரை எதுவும் செய்ததில்லை எனவே அவர் எங்க கிராமத்துக்கு ஓட்டு கேட்டு வரக்கூடாது என நத்தமேடு கிராம மக்கள் அங்குள்ள அதிமுகவினரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே தொண்டர்கள் புடைசூழ அமைச்சர் பழனியப்பன் ஓட்டு கேட்க‌ அங்கே வந்தார். கொதிப்படைந்த மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் அமைச்சரின் கார் மீது வீசினர். சிலர் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி வீசத்தொடங்கினர் இதனை சற்றும் எதிர்பார்க்காத அதிமுகவினர் அமைச்சர் மீது செருப்பு படாதவாறு பார்த்துக்கொண்டு அமைச்சரை திருப்பி அனுப்பினர். இந்த சம்பவம் அங்கே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 20 நபர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic