Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 29, 2016

புதுவை முதலைமச்சராகிறார் நாராயணசாமி


புதுவை மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்துவரும் நாராயணசாமி முதலைமைச்சராக பதவி ஏற்கவுள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற சட்டபேரவை தேர்தல் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் இணைந்து இந்த தேர்தலை சந்தித்தது. இதில்  காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் திமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தேர்தல் முடிவு வெளியானதிலிருந்து யார் முதலைமைச்சர் ஆவார் என இழுபறி இருந்த நிலையில், நாராயணசாமி முதல்வராக இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஷீலா தீட்சித் தலைமையில் நடைபெற்றது.

முதல்வர் பதவிக்கு நாராயணசாமி மற்றும் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் நாராயணசாமிக்கு  அதிக எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்ததால் அவர் முதலைமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டியிட்ட 30 தொகுதிகளில் 15ல் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 1 எம்.எல்.ஏவின் ஆதரவு தேவைப்படுவதால் திமுகவிடம் ஆதரவு கோரி சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு கோரினார் நாராயணசாமி.

ஆட்சியில் பங்கு கேட்டால் 1 மந்திரி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கெடுப்பதா? அல்லது வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதா? என்பதை திமுக தலைவர் முடிவு செய்வார் என தெரிவிக்கப்படுள்ளது. புதுவை மாநிலத்தின் புதிய ஆளுனராக கிரண் பேடி பொறுப்பேற்கவுள்ளார். என்று பதவி ஏற்பு விழா நடைபெறும் என்பது ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic