பாட்னா - பீஹார் மாநிலத்தில் மதுவிலைக்கை அமலுக்கு கொண்டு வந்ததிலிருந்து குற்றங்கள் வெகுவாக குறைந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தார் நிதிஷ் குமார். தேர்தலின் போது யாருமே எதிர்பார்க்காத அமோக வெற்றியை நிதிஷ்-லாலு கூட்டணி பெற்றது. பதவியேற்ற பின் மதுவிலக்கை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் நிதிஷ் குமார் ஈடுபட்டு துரிதப்படுத்தினார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மதுவிலக்கு அமலுக்கு வந்தது.
முதற்கட்டமாக மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், வெளிநாட்டு மது வகைகளை மட்டும் விற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மதுக்கடைகளை மூடியது பெண்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை அரசுக்கு பெற்றுத்தந்தது. இதனை தொடர்ந்து வெளி நாட்டு மதுவகைகளையும் விற்பதற்கான தடை அமலுக்கு வந்தது. மதுவுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் துவங்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பீஹார் மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிட்டி பார்க்கும்போதும் சுமார் 27% அளவிற்கு குற்றங்கள் குறைந்துள்ளன. கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பலாத்காரம், பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, வன்முறை உள்ளிட்டவை வெகுவாக குறைந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் கொலை தொடர்பாக 206 வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 276 வழக்குகள் பதிவாகியிருந்தன. பலாத்கார வழக்குகள் 112ல் இருந்து 59 ஆக குறைந்துள்ளன. மதுவிலக்கு கொண்டுவந்த காரணத்தால் குற்றசம்பவங்கள் குறைந்துள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல் கள்ளச்சாராயம் பெருகி விடாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதோடு, அண்டை மாநிலங்களில் இருந்து திருட்டுத்தனமாக மது வாங்கி வந்து குடிப்போர், கடத்துவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருமானம் பரிபோகும் என்ற நிலையிலும் அதனைப் பற்றி கவலைப்படாமல் மக்களின் ஆரோக்கியமே முக்கியம் என்ற ரீதியில் மிகவும் பின் தங்கிய மாநிலமாக இருக்கும் பீஹார் வளர்ந்த மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக மாறியிருப்பது பாராட்டத்தக்க விஷயமாகும். இதனை மற்ற மாநிலங்களும் உதாரணமாக எடுத்துக்கொண்டு மது இல்லா தேசம் உருவாக்க முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வளர்களின் எதிர்பார்ப்பாகும்.
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தார் நிதிஷ் குமார். தேர்தலின் போது யாருமே எதிர்பார்க்காத அமோக வெற்றியை நிதிஷ்-லாலு கூட்டணி பெற்றது. பதவியேற்ற பின் மதுவிலக்கை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் நிதிஷ் குமார் ஈடுபட்டு துரிதப்படுத்தினார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மதுவிலக்கு அமலுக்கு வந்தது.
இந்நிலையில் பீஹார் மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிட்டி பார்க்கும்போதும் சுமார் 27% அளவிற்கு குற்றங்கள் குறைந்துள்ளன. கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பலாத்காரம், பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, வன்முறை உள்ளிட்டவை வெகுவாக குறைந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் கொலை தொடர்பாக 206 வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 276 வழக்குகள் பதிவாகியிருந்தன. பலாத்கார வழக்குகள் 112ல் இருந்து 59 ஆக குறைந்துள்ளன. மதுவிலக்கு கொண்டுவந்த காரணத்தால் குற்றசம்பவங்கள் குறைந்துள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல் கள்ளச்சாராயம் பெருகி விடாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதோடு, அண்டை மாநிலங்களில் இருந்து திருட்டுத்தனமாக மது வாங்கி வந்து குடிப்போர், கடத்துவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருமானம் பரிபோகும் என்ற நிலையிலும் அதனைப் பற்றி கவலைப்படாமல் மக்களின் ஆரோக்கியமே முக்கியம் என்ற ரீதியில் மிகவும் பின் தங்கிய மாநிலமாக இருக்கும் பீஹார் வளர்ந்த மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக மாறியிருப்பது பாராட்டத்தக்க விஷயமாகும். இதனை மற்ற மாநிலங்களும் உதாரணமாக எடுத்துக்கொண்டு மது இல்லா தேசம் உருவாக்க முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வளர்களின் எதிர்பார்ப்பாகும்.

No comments:
Write comments