செயற்க்கைக்கோள் மற்றும் விண்களங்களை விண்ணில் ஏவப்பட்டும் போது அதனை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை தூக்கிச்செல்ல ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. அப்படி கொண்டு செல்லப்பட்ட செயற்கைகோள்கள் அந்த குறிப்பிட்ட தூரத்தை அடைந்ததும் ராக்கெட்டிலிருந்து தனியாக பிரிந்து சென்றுவிடும். பின்னர் அந்த ராக்கெட் கடலில் விழுந்து வீணாகி விடுவது வழக்கம். இதனால் அதிக அளவு செலவும் ஏற்படுகிறது.
ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் செயற்கைக்கோளை அதன் எல்லையில் விட்ட பிறகு ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையிலான ராக்கெட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் இந்தியாவின் செயற்கைக்கோள் மையமனா இஸ்ரோ இது போன்ற ராக்கெட்டுகளை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. அதன் முதற்கட்டமாக சிறிய அளவிலான ராக்கெட்டை ரூபாய் 95 கோடி செலவில் தயாரித்தனர். அதற்கு ஆர்.எல்.வி - டிடி என்று பெயரிட்டனர்.
அதனை விண்ணில் ஏவும் சோதனையை மேற்கொண்டனர். இச்சோதனை முதற்கட்டமாக வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோவின் செய்தி தொடர்பாளர் பிடிஐ தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி உட்பட ஏராளமான தலைவர்கள் இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

No comments:
Write comments