ஈரோடு பெரிய அக்ர காரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு. தி.க.
வேட்பாளர் பொன் சேர்மனை ஆதரித்து நேற்று இரவு 9.30 மணிக்கு திறந்த வேனில்
நின்றபடி பிரேமலதா பேசினார்.அப்போது அவர் தே.மு.தி.க.விலிருந்து
விலகி மக்கள் தே.மு.தி.க. அமைப்பு தொடங்கி தி.மு.க. கூட்டணியில் இணைந்த
சந்திரகுமாரை கடுமையாக தாக்கி பேசினார்.
இந்த ஈரோடு பெரியார் அவதரித்த புண்ணியபூமி. இந்த பூமியில் துரோகிகள் அதிகமாகி விட்டார்கள். என்னை அண்ணி... அண்ணி... என்று அழைத்த ஓடுகாலி நமக்கு துரோகம் செய்து விட்டது.எதிரிகளைவிட கேப்டன் மன்னித்து விடுவார் ஆனால் துரோகிகளை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்.
தமிழ்நாட்டில் ஏன் இந்த ஈரோட்டில் கூட உன்னை யாருக்கும் அடையாளம் தெரியாது. அப்படிப்பட்ட உனக்கு (சந்திரகுமாருக்கு) கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்து எம்எல்.ஏ. ஆக்கி சட்டசபையில் ‘கொறடா’ ஆக்கி தமிழ்நாட்டில் உனக்கு அடையாளம் கொடுத்தவர் கேப்டன்.
அப்படிப்பட்ட உத்தமனுக்கு துரோகம் செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது? கேப்டன்...கேப்டன்... அண்ணி...அண்ணி... என்று கூறி சுற்றி வந்த உன்னை எங்களது பிள்ளை போல் நினைத்தோமே. ஆனால் நீ சூட்கேசை வாங்கி கொண்டு துரோகம் செய்து எங்கள் முதுகில் குத்தி விட்டாயே சூட்கேசை வாங்கி ஓடிய ஓடுகாலி குள்ளநரியே உன்னை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஏன்? உன் குடும்பம் கூட உன்னை மன்னிக்காது.
பெரியார் பிறந்த இந்த மண்ணில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்து விட்டு தி.மு.க.வில் சேர்ந்து ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் குள்ளநரி முத்துசாமி. இதே போல் உத்தமன் கேப்டனுக்கு துரோகம் செய்து விட்டு மற்றொரு குள்ளநரி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது.இந்த இரண்டு குள்ளநரிகளையும் ஈரோடு மக்கள் தக்கபதிலடி கொடுப்பார்கள். அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது.
தமிழ்நாட்டில் இவர்களைப் போல் துரோகிகள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. ஈரோடு மக்கள் துரோகத்துக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.
கேப்டன் விஜயகாந்தை எதிர்த்தவர்கள் கொட நாட்டு ராணியாக இருந்தாலும் காமெடியனாக இருந்தாலும் துரோகிகளாக இருந்தாலும் அவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது.
இவ்வாறு பிரேமலதா பேசினார்.
கூட்டத்தில் ஈரோடு ஒன்றிய தே.மு.தி.க. முன்னாள் செயலாளர் டி.என்.ஏ.ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments