மன்னார்குடியில் மன்னையின் மைந்தர்கள் அமைப்பு சார்பில் நமது வாக்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேசியதாவது: ஜனநாயகத்தின் ஆணிவேராக தேர்தல் இருக்கிறது. மக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் போதுதான் நியாயமான தேர்தலாக இருக்கும். வாக்களிக்காதவர்கள் பொறுப்பில்லாதவர்கள் என்றே கருதப்படுவர். ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று இருப்பவர்கள் பொறுப்பற்றவர்கள். அவர்கள் தான் அபாயகரமானவர்கள் என்று உணர வேண்டும். படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள் மட்டுமே இந்த சமூகத்தில் அதிகம் பயனடைந்தவர்கள். அவர்களும் முழுமையாக வாக்களிக்க முன்வர வேண்டும்.
எந்த ஒரு தலைமையும் ஊழல் மனப்பான்மையுடன் இருந்தால் சமூகம் ஊழல் மனப்பான்மையுடன் உள்ளது என்று பொருள். அரசியலில் மாற்றங்கள் வேண்டும் என்றால் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் மாறுவோம். அந்த மாற்றம் சமுதாயத்தில் நேர்மையான தலைவர்களை உருவாக்கும். அந்த தலைவர்கள் மூலம் ஒப்பற்ற சமூகம் உருவாகும். இவ்வாறு சகாயம் பேசினார்.
No comments:
Write comments