சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக படு தோல்வி அடைந்ததையொட்டு அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களை அழைத்து விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் துவக்கத்தில் கூட்டணை வைப்பதற்காக எத்துனையோ கட்சிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அழைத்தும் செவிசாய்க்காதா தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனித்து போட்டியிடுவதாகவே அறிவித்திருந்தார். ஆனால் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் நலக்கூட்டணியோடு சேர்ந்து முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.
ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் தேமுதிக சார்பில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் போனதோடு மட்டுமல்லாமல் நிறைய தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தனர். தோல்வியின் காரணத்தை அறிய தினமும் 10 மாவட்ட செயலாலர்களை அழைத்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்றைய தினம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர் மாவட்ட செயலாளர்கள் அடங்கிய கூட்டம் நடைபெற்றது. இதில் ஒத்தக்கருத்தாக தவறான கூட்டணியில் இணைந்ததாலேயே தோல்வி அடைந்தோம் என மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2006ல் நடைபெற்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 12% வாக்குகளை தேமுதிக பெற்றது. 2011ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் தனது வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனதோடு மிகப்பெரும் தோல்வையை சந்தித்தது தேமுதிக. இதன தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் இழந்தது. இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமின்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
பெரும்பாலும் தவறான கூட்டணியால் தான் தோல்வியுற்றோம் என மாவட்ட செயலாளர்கள் கருத்து தெரிவித்து வருவதால் மக்கள் நலக்கூட்டணியோடு தொடர்ந்து விஜயகாந்த் இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலில் தோல்வை அடைந்ததையொட்டு விஜயகாந்த்தை சந்தித்த மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் உள்ளாட்சி தேர்தலிலும் தங்களது கூட்டணி தொடரும் என்று சொன்னார்கள். ஆனால் விஜயகாந்த மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை செய்துவருவதால மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் விழிபிதுங்கி காணப்பட்டனர்.

No comments:
Write comments