பாகிஸ்தானில் தாவுத் இப்ராகிம் ஒழிந்திருக்கும் இடத்தின் தகவலை ஒரு பிரபல டிவி நிறுவனம் வெளியிட்டிருந்தது. தாவூத் இப்ராகிம் ஒரு சர்வதேச தீவிரவாதி, அவனை பிடிப்பதற்கு சர்வதேச புலனாய்வு அதிகாரிகளின் உதவியும் தேவைப்படுகிறது, இது தொடர்பான அத்துனை முயற்சிகளிலும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே தாவுத் இப்ராகிம் தொடர்பான ஆவனங்களை பாகிஸ்தான் அரசிற்கு கொடுத்துள்ளோம். வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் தொடர்ந்து பாகிஸ்தான் அரசிற்கு நெருக்கடி கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இந்தியாவைச்சேர்ந்த தீவிரவாதிகள் இணைந்துள்ளது தொடர்பான வீடியோ வெளியாகியது குறித்து கேள்வி கேட்டதற்கு, இதுவரை ஐ.எஸ் தீவிரவாதிகளால் இந்தியாவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் யாரும் ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை, இந்தியாவில் ஆட்களை சேர்பதற்கு ஒரு போதும் இங்குள்ள முஸ்லிம்கள் அனுமதிக்கமாட்டார்கள் என தாம் நம்புவதாக திட்டவட்டமாக அறிவித்தார்.

No comments:
Write comments