Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 24, 2016

ஐ.எஸ் அமைப்பில் கடலூரைச்சேர்ந்த 2 இளைஞர்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்




ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தனது இயக்கத்தை பிரபலப்படுத்துவதற்காக 20 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் 2 தமிழர்கள் உட்பட 11 இந்தியார்களை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக மூத்த அதிகர்ரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் தனியொரு ஆட்சியை அமைக்கப்போவதாக கூறி ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டுவருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் இந்த தீவிரவாதிகள் பல நாடுகளிலிருந்து இளைஞர்களை தங்களுடைய அமைப்பில் சேர்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது.

தற்போது அதிக அளவில் இந்தியர்களை குறிவைத்து வரும் இவர்கள், தங்களுடைய அமைப்பில் சேர்த்துவருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் வெளியிட்ட வீடியோவில் 11 இந்தியர்கள் இருப்பதும் அதில் இரண்டு தமிழர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டத்தைச்சேர்ந்த காஜா பக்ருதீன் உஸ்மான் அலி என்பவர் என கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய அதிகாரிகள் கூறும்போது,

6 வருடங்களுக்கு முன்பாக காஜா மற்றும் அவனது குடும்பத்தினர் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றுள்ளனர். கடந்த 2103ஆம் ஆண்டு தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் ஜிஹாதில் பங்கெடுப்பதற்காக சிரியா சென்றதாகவும், அங்கே ஐ.எஸ் தீவிரவதிகளை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் இந்தியா திரும்பியுள்ளனர். சிரியாவில் செசன்யா முஜாஹிதீன் அமைப்பினரோடு தங்கியிருந்ததாகவும்,  பின்னர் 2014ஆம் ஆண்டு சென்னையிலிருந்து சிரியா செல்ல துருக்கிக்கு சென்றதாகவும் அன்று முதல் தீவிரமாக ஐ.எஸ் அமைப்பில் செயல்பட்டுவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மற்றொரு நபரும் கடல்லூர் மாவட்டத்தைச்சேர்ந்த‌ குலாம் முகமது மரைக்கார் என்பதும் அவனும் சிங்கப்பூரிலிருந்து ஐ.எஸ் தீவிரவாதிகளோடு தொடர்பை ஏற்படுத்தி 2015ல் அங்கு சென்றதாகவும் தெரிகிறது.

ஐ.எஸ் தீவிரவாதிகளால் வெளியிடப்பட்ட வீடியோ குறைந்தது 10 மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டவையாக இருக்கலாம்,  மேலும் 9 இந்தியர்களில் உத்திரபிரதேச மாநிலம் ஆஜம்கர் ஊரைச்சேர்ந்த பகத் சேக் என்றும், சாஜித் அலி என்றும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் முன்னால் இந்திய முஜாஹிதீன் அமைப்பின் உறுப்பினர்கள் என்று அதிகாரி தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic