தன்னுடைய சொந்த வேலை விஷயமாக அமெரிக்கா சென்றுள்ள பிரஷாந்த் பூஷன் வாஷிங்டனில் இந்தியர்களோடு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு பேசியுள்ளார். அவர் கூறியதாவது "கெஜ்ரிவால் ஒரு நேற்மையற்ற தலைவர், தன்னுடைய சொந்த லாபத்திற்காக நரேந்திர மோடியுடன் கூட கூட்டு சேர்வதற்கு தயங்காதவர். நான் உறுதியாக கூறுவேன் நிச்சயம் ஒரு நாள் பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பார், அதற்கான நாளை அவர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து கடந்த வருடம் வெளியேறிய பிரஷாந்த் பூஷன், யோகேந்திர யாதவுடன் இணைந்து "ஸ்வராஜ் அபிமான்" என்னும் அமைப்பை உருவாக்கினார். தனக்கு நம்பகத்தன்மை ஏற்படுவதற்காக என்னையும் யோகேந்திர யாதவையும் நன்கு பயன்படுத்திக்கொண்டு தன்னிச்சையாகவே முடிவெடுத்துவந்தார், இதன்மூலம தனது நோக்கத்தை நிறைவேற்றுவதிலேயே முனைப்பாக இருந்தார். கெஜ்ரிவாலுக்கு ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற ஆர்வம்லாம் இல்லை, அவரது கட்சியின் எம்.எல்.ஏக்களஏ தற்போது ஊழல் வழக்கில் சிக்கிவருகின்றனர். மன்மோஹன் சிங் போலவே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு பண்பு உண்டு, தான் எந்த ஊழலிலும் ஈடுபடாது தன்னுடைய எம்.எல்.ஏக்களும் மந்திரிகளும் ஊழல் செய்யும்போது அதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பார்.
பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. பஞ்சாபில் அவர்கள் வெற்றி பெற்றால் ஒரு குழப்பான ஆட்சியே நடைபெறும். அதற்கு காங்கிரஸ் எவ்வளவோ மேல் என்றே நான் கருதுகிறேன். எந்த நோக்கத்தில் ஆம் ஆத்மி கட்சி துவங்கப்பட்டதோ அந்த இலக்கை நோக்கி எப்பொழுதோ தடம் புறண்டுவிட்டது" இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Write comments