Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 24, 2016

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் குடிமகன்கள் தவிப்பு


தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டது போல தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக கொண்டு வரப்படும் என்று அதிமுக அரசு தெரிவித்திருந்தது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்ற அன்றே முதல் நடவடிக்கையில் கையெழுத்திட்டார். அதில் தமிழகத்தில் 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படும் என்றும், டாஸ்மாக் கடைகளின் பணி நேரம் 12லிருந்து 10 மணி நேரமாக குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நடவடிக்கை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. வழக்கம் போல் காலை 10 மணிக்கே குடிமகன்கள் டாஸ்மாக் கடைக்கு முன்பு வந்து குவிய கடைகள் மூடப்பட்டுள்ளதை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். நண்பகல் 12 மணிக்குத்தான் கடைகள் திறக்கப்படும் என்றதும் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல, என்ன ஆனாலும் சரி சுதந்திர தியாகி கொடி காத்த குமரன் என்ன ஆனாலும் சரி தேசியக்கொடியை கீழே விடமாட்டேன் என்று சொன்னது போல என்ன ஆனாலும் சரி குடிக்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்கிற ரீதியில் 12 மணிக்காக காத்திருக்கின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic