சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 134 இடங்களை பிடித்து அதிமுக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதற்கான பதவி ஏற்பு விழா நாளை நன்பகல் 12 அளவில் சென்னை பல்கலைகழகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆளும்கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிப்பது இதுவே முதல்முறையாகும். அதிமுக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டதை அடுத்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறும் எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுனர் ரோசையாவிடம் முதல்வர் ஜெயலலிதா சமர்பித்தார்.
இதனை அடுத்து முதல்வர் ஜெயலலிதா உட்பட அனித்து அமைச்சர்களுக்கும் நாளை பதவி பிரமாணம் செய்துவைக்கிறார் ஆளுனர் ரோசையா. இதற்கான ஏற்பாடுகள் சென்னை பல்கலைகழகம் நூற்றாண்டு அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட ஏராளமான தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுக்கும் எதிரி கட்சி தலைவராக இருக்கும் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஈரான் சென்றுள்ளதால் அவருக்கு பதிலாக வெங்கையா நாயுடு பங்கேற்பார் என தெரிகிறது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்துவருகின்றது. இதனையொட்டு பல்கலைகழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

No comments:
Write comments