பா.ஜ.க இஸ்லாமிய மக்களுக்கு விரோதியான கட்சியல்ல என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷானவாஸ் உசேன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.கவின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சேப்பாக்கம் திருவல்லிக்கேனி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் தாமரை கஜேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷானவாஸ் உசேன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் பேசியதாவது,
பா.ஜ.க வை இஸ்லாமிய விரோத கட்சியாக மக்கள் நினைக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறான எண்ணமாகும். உண்மையில் பா.ஜ.க பொதுவான கட்சியாகும். இஸ்லாமியர்களை பிளவுபடுத்த சிலர் சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களது சூழ்ச்சிக்கு நாம் ஆட்பட்டுவிடக்கூடாது. இஸ்லாம் மதம் அமைதியை போதிக்கும் மதம் என்பதை உலக அரங்கில் உரக்க சொன்னவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. இஸ்லாமியர்கள் உட்பட அனைவரும் இணைந்து தான் நமது நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும். பா.ஜ.க ஒருபோதும் இஸ்லாமியர்களை தனித்துபார்ப்பதிலை. வறுமையை எதிர்த்துத்தான் போராடவேண்டுமே தவிற மதத்தை எதிர்த்து அல்ல்" இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Write comments