சட்டசபை தேர்தலின் இறுதிகட்ட பிரச்சாரம் தமிழகத்தில் நடந்து வருகிறது. அதே சமயம் வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் எந்த முறையும் இல்லாத அளவிற்கு ஆவணம் இல்லாமல் ரூபாய் 100 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தேர்தல் அதிகாரிகள் எவ்வளவுதான் கண்காணிப்பை தீவிரப்படுத்தினாலும் இரவு நேரங்களிலும் பல இடங்களில் மிக ரகசியமாகவும், பல்வேறு யுக்திகளைக் கொண்டு அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. தங்களது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்க வருபவர்கள் அரசியல் திருடர்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும், இன்று ஓட்டுப்போடுவதற்காக பணம் கொடுத்துவிட்டு நாளை எம்.எல்.ஏ ஆகியவுடன் செலவழித்த பணத்தை இருமடங்காகவோ அல்லது பல மடங்காகவோ சம்பாதிப்பதற்காகவே இந்த திட்டம் நடைபெறுகிறது. உண்மையில் மக்கள் சேவையாற்ற நினைக்கும் எவரும் இத்தகைய கீழ்தரமான செயல்களில் ஈடுபடமாட்டார்கள். உங்கள் பகுதியில் எவரேனும் பணம் தர முயன்றால் உடனே கீழ் கண்ட தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவியுங்கள்.
ஊழல் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்குவோம்!
Tamil Nadu State Election Commission
No.208/2, Jawaharlal Nehru Road, Opp. CMBT, Arumbakkam, Chennai 600 106
EPABX No.: 044-2363 5010, 2363 5011 Fax No.:044-2363 8282, 2363 8283
E-Mail : tnsec.tn@nic.in
No comments:
Write comments