ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அதிமுக கூட்டணியின் வேட்பாளரும் நடிகருமான கருணாஸை ஊருக்கு வரவிடாமல் புதுக்குடி கிராம மக்கள் தடுத்தனர். இதனால் தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துவிட்டு கருணாஸ் திரும்பினார்.திருவாடனை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நடிகர் கருணாஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். தான் போட்டியிடுகின்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமமான புதுக்குடிக்கு சென்ற போது அக்கிராம மக்கள் கருணாஸை தங்கள் ஊருக்குள் வரவிடாமல் தடுத்தனர். கருணாஸ் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் அதிமுகவினர் யாரும் ஓட்டு கேட்டு தங்கள் கிராமத்திற்குள் வரக்கூடாது என பிடிவாதமாக அக்கிராமத்து மக்கள் கூறியதால் பாதியிலேயே தனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டி திரும்பினார் கருணாஸ்.
கடந்து வருடம் தாங்கள் வழிபட்டு வந்த ஆதிபராசக்தி கோயிலை போலீஸ் ஸ்டேஷன் கட்டுவதற்காக இடித்து தரைமட்டமாக்கினர். கிராமத்தின் சார்பாக பல போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனுமில்லை. இது தவிற அதிமுகவின் நகர நிர்வாகிகள் யாரும் இது குறித்து விசாரிக்கக்கூட கிராமத்திற்குள் வரவில்லை ஆனால் ஓட்டு கேட்டு மட்டும் வருகின்றனர் என அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
No comments:
Write comments