தேவையான பொருட்கள்
1. 1 கப் சுண்டல் (கொண்டைக்கடலை)
2. 1 1/2 டேபிள் ஸ்பூன் தாஹினி பேஸ்ட்
3. பல் பூண்டு
4. 1/4 கப் சுண்டல் அவித்த தண்ணீர்
5. 1/4 கப் ஆலிவ் எண்ணெய்
6. 3-5 டேபில் ஸ்பூன் எலுமிச்சை சாறு
7. உப்பு (தேவையான அளவு)
தாஹினி பேஸ் செய்ய:
1/4 கப் எள்ளு (வறுத்துக்கொள்ளவும்)
1/4 கல் ஆலிவ் எண்ணெய்
செய்யும் முறை:
1. முதலில் சுண்டலை 6 மணி நேரம் ஊர வைத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேகும் வரை அவிக்கவும். வேக வைத்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.
2. தாஹினி பேஸ்ட் செய்வதற்கு எடுத்துக்கொண்ட பொருட்களை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
3. இப்பொழுது சுண்டல், தாஹினி பேஸ்ட், எலுமிச்சை சாறு, பூண்டு, உப்பு, சுண்டல் அவித்த தண்ணீர், மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
குறிப்பு:
தேவைப்பட்டால் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கலாம். இன்னும் கொஞ்சம் புளிப்பு தேவை என்றால் எலுமிச்சை சாறு அளவை கூட்டலாம். ஹும்முஸ் ரெடி ஆனதும், அதன் மேலே மிளகாய் தூள், ஆலிவ் எண்ணெய் மற்றும் மல்லி அல்லது பார்ஸ்லி இலை சேர்த்து பரிமாறலாம்.
டிரை பண்ணிப்பாருங்க...!

No comments:
Write comments