Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 2, 2016

டெல்லியில் பெட்ரோ டீசல் டாக்ஸிகளுக்கு நோ...

புதுடெல்லி : “டெல்லியில் பெட்ரோல் அல்லது டீசலில் ஓடும் டாக்ஸிகளை இயக்க கூடாது” என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  டெல்லியில் காற்று மாசுப்பாடு அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க ஒற்றைப் படை பதிவு எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப் படை தேதிகளிலும், இரட்டைப் படை பதிவு எண்கள் கொண்ட கார்களை இரட்டைப் படை தேதிகளிலும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது 2-வது முறையாக அமலில் உள்ளது.

மேலும், காற்று மாசுப்பாட்டை குறைக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் பெட்ரோல், டீசலில் ஓடும் தனியார் டாக்ஸிகள் அனைத்தும் சிஎன்ஜி இயற்கை எரிவாயுவுக்கு மாற்றப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், ஏப்ரல் 30-ம் தேதிக்குள் டாக்ஸிகள் அனைத்தும் சிஎன்ஜி.க்கு மாற்றப்பட வேண்டும் என்று கெடு விதித்தது.

ஆனால், டெல்லியில் ஓடும் அனைத்து டாக்ஸிகளையும் உடனடியாக சிஎன்ஜி.க்கு மாற்றும் அளவுக்கு தொழில்நுட்பம் இல்லை. எனவே, காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று தனியார் டாக்ஸி ஆபரேட்டர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், “டாக்ஸிகளை சிஎன்ஜி.க்கு மாற்ற போதிய அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. எனவே, காலக்கெடுவை நீட்டிக்க முடியாது. மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசலில் ஓடும் டாக்ஸிகளை டெல்லியில் அனுமதிக்க முடியாது” என்று உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவு ‘ஆல் இண்டியா பர்மிட்’ பெற்றுள்ள டாக்ஸிகளுக்குப் பொருந்தாது என்று உத்தரவிட்டது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic