குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள வர்ஸ்கா பகுதியைச்சேர்ந்தவர் பாரத் தொகாடியா, வி.ஹெச்.பி தலைவர் பிரவீன் தொகாடியாவின் நெருங்கிய உறவினராவார். நேற்று இரவு பாரத் தொகாடியா சொத்து தகராறு சம்பந்தமாக சிலருடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பாரத் தொகாடியா உள்ளிட்ட 4 பேரை சரமாரியாக குத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பாரத் தொகாடியா உட்பட 3 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கேள்விப்பட்ட பிரவீன் தொகாடியா இறுதிச்சடங்ககில் பங்கேற்பதற்காக அப்பகுதிக்கு விரைந்துள்ளார். பெரும் பதட்டம் அங்கே நிலவி வருகிறது.

No comments:
Write comments