Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 10, 2016

தமிழத்தில் பீர் விற்பனை படு ஜோரு!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மது விற்பனை மிக வேகமாக அதிகரித்துள்ளதாகவும், இதனால் தேர்தல் அதிகாரிகள் இது தொடர்பாக தங்களுடைய விசாரணையை துவக்கியுள்ளனர்.

சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வரும் இந்நேரத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டத்திற்கு ஆள் சேர்பதற்காகவும், ஒட்டுப்போடுவதற்காகவும், மதுபானம் கொடுப்பதை தடுக்கும் பணிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரவாக கண்காணித்து வருகின்றனர்.


மது தயாரிக்கப்படும் ஆலைகள், விற்பனை செய்யப்படும் இடங்களை தீவிரமாக கண்காணித்து விற்பனை தொடர்பான தகவல்களை மண்டலம், கடைகள் வாரியாக விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன். இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் மது விற்பனையை இந்த மாதத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது 7% அதிகரித்துள்ளதாகவும், அதிலும் குறிப்பாக பீர் விற்பணை 37% அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மே 15,16 மற்றும் 18,19 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூடப்படும் என தெரிவித்துள்ளதால் முன்னதாகவே அதிக அளவில் வாங்கப்பட்டு பதுக்கிவைக்கும் முயற்ச்சி நடைபெற வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் உஷார் அடைந்துள்ளனர்.

பெரும்பாலும் அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடந்து முடிந்த பிறகு மதுக்கடைகளில் விற்பனை அமோகமாக இருக்கும். கூட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்காக அக்கட்சிகளே மது வகைகளை இலவசமாக வந்தவர்கள் வாங்கி கொடுக்கும் பழக்கம் தமிழகத்தில் தொடர்கதையாகவே நடந்து கொண்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவெனில் இவ்வாறு தனது தொண்டர்களுக்கும், கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு மது வாங்கி கொடுக்கும் அனைத்து கட்சிகளுமே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்பதுதான்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic