"நாலு நாளைக்கு மட்டும் என்னை முதலைமைச்சரா வையுங்க, எல்லாத்தையும் மாட்திபுடுவேன்" என்று பிரபல நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்தார்.
திருச்செங்கோடு தொகுதியில் மதிமுக சாபில் போட்டியிட மறுக்கப்பட்டு அக்கட்சியின் திருச்செங்கோடு ஒன்றிய முன்னால் செயலாளர் முத்துமணி சுயேட்சையாக களம் காண்கிறார். அவருக்கு ஆதரவாக நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு பிரச்சாரம் செய்துவருகிறார். அவர் பத்திரிகயாளரிடம் பேசும்போது,

"என்னை யாராவது அவுங்க கட்சில சேர கூப்டாங்கன்னா நாலு நாளைக்கு மட்டும் முதலைமைச்சர் பதவி தாங்கையான்னு கேட்பேன். ஏன்னா அந்த நாலு நாளுல செய்யவேண்டிய எல்லாத்தை செஞ்சு முடிச்சுறலாம் பாருங்க. நான் மட்டும் முதலைமைச்சர் ஆயிட்டேன்னு வைங்க, ஸ்கூல் படிக்கிற பசங்க ஒவ்வொரு புள்ளைக்கும் டெய்லி ஒரு கோழி மதிய சாப்பாட்டுக்கு கொடுப்பேன். இத சும்மா சொல்லலைங்க நெசமாதான் சொல்றேன். நம்ம முத்துமணி ஜெயிச்சுட்டார்னா எல்லா நதிகளையும் ஒன்னு சேர்த்துருவாரு. நிறைய கட்சிங்க அவிங்களோட சேற என்ன கூப்பிட்டாய்ங்க, ஆனா நா யார்கிட்டையும் சேரல. நம்ம முத்துமணி மட்டும் கட்சி ஆரம்பிச்சாருன்னா நானும், ஷகீலாவும் முதல் ஆளா கட்சில சேர்ந்துருவோம். நான் அவ்வளவா படிக்கல அதனால எல்லாரும் என்ன ஏமாத்திட்டாய்ங்க. கோடிக்கணக்குல பணத்த கோட்டவுட்டுட்டேன். நான் முதலைமைச்சர் ஆயிட்டா எல்லாதுக்கும் இலவச கல்வி கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்" இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Write comments