பனாஜி: நாளை எனது மகன் சட்டத்திற்கு புரம்பாக எந்த தவறு செய்தாலும் விடமாட்டேன் என பனாஜி நகரில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்.
கோவா மாநிலம் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி வைத்த அரவிந்த் கேஜ்ரிவால் பேசும்போது, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டே, அது எனது மகனாக இருந்தாலும் சரியே என்று கூறினார். சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியின் உணவுத்துறை அமைச்சராக லஞ்சம் கேட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
புதுடெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ரூபாய் 1400 கோடி மானியத்தில் மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது, இதனால் 36 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆனால் இதை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது. நாங்கள் மானியத்தை சாமானிய மக்களுக்குத்தான் வழங்கினோம் ஆனால் காங்கிரஸ் அரசு மது விற்பனையாளர் மல்லையா என்ற ஒரு நபருக்கு மட்டும் 9000 கோடியை வழங்கியிருக்கிறது.
மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பா.ஜ.க அரசு மல்லையா நாட்டை விட்டு தப்பிச்செல்வதற்கும் வழிவகுத்திருக்கிறது. இவர்கள் ஆம் ஆத்மி கட்சியை பற்றி விமர்சிப்பதற்கு தகுதியே இல்லை. ஒரு வருடத்திற்கு முன்பு இந்தியாவிலேயே டெல்லியில் தான் மின்சாரக்கட்டணம் அதிகமாக இருந்தது. தற்போது இரண்டாவது குறைந்த விலையில் மின்சாரத்தை நாங்கள் வழங்கிக்கொண்டிருக்கிறோம்.
மின்சாரத்தை தனியார் துறையிடம் ஒப்படைத்திருந்ததால் அதில் அதிகம் முறைகேடுகள் நடந்திருக்கிறது எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் எவ்வளவோ கோரிக்கை வைத்தும் இதற்கு முன் இருந்த அரசு செவிசாய்க்கவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கணக்கு வழக்குகளை முறையாக சரி பார்த்த போது ரூபாய் கோடிக்கு ஊழல் நடந்திருப்பதை கண்டுபிடித்தோம். இந்த ஊழலில் ஈடுபட்ட அனைவரும் விரைவில் தண்டிக்கப்படுவார்கள், இவ்வழக்கிற்கான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இவ்வழக்கில் டெல்லி அரசு வெற்றி பெற்றதுடன் இன்னும் மின்சாரக்கட்டணம் குறைக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

No comments:
Write comments