தடகள வீரர் முகமது அனஸ் தகுதி பெற்றுள்ளதையடுத்து ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 100 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க போகின்றனர்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 வீரர்-வீராங்கனைகளை தகுதி பெறச் செய்ய வேண்டுமென்பதை இலக்காக கொண்டு, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்பட்டு வந்தது. தற்போது அது நிறைவேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கஜகஸ்தானில் அல்மாதி நகரில் 100 மீட்டர் ஓட்டத்தை 11.30 வினாடிகளில் கடந்து டூட்டி சந்த் 99வது இந்தியராக ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து 400 மீட்டர் ஓட்டத்தில் கேரளத்தை சேர்ந்த முகமது அனஸ் 45.40 வினாடிகளில் கடந்து தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற 45.40 வினாடிகளில் 400 மீட்டரை கடக்க வேண்டும். முகமது அனஸ் மிகசரியாக கடந்தார்.
அத்துடன் ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற 100வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன் கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு அதிகபட்சமாக 86 வீரர்களை இந்தியா அனுப்பியுள்ளது.
இந்திய தடகளக் குழுவில் அதிகபட்சமாக 10 வீரர்களும் 9 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். ரியோ ஒலிம்பிக் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்க இருக்கிறது.
செய்தி :: சாஹிப்...


No comments:
Write comments