நான்கு ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.
ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில், நேற்று போர்ச்சுக்கல் அணி, ஹங்கேரி அணியை எதிர்கொண்டது. ஐரோப்பிய கோப்பையில் ரொனால்டோ களமிறங்கும் 17வது ஆட்டம் இதுவாகும். இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இந்தப் போட்டியில் ரொனால்டோ 49 மற்றும் 61 வது நிமிடங்களில் என இரு கோல்கள் அடித்தார்.
இதன் மூலம் 4 ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். அதாவது 2004, 2008, 2012, 2016 ம் ஆண்டுகளில் தொடர்ந்து கோல் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். யூரோவில் இதுவரை ரொனால்டோ 6 கோல்கள் அடித்துள்ளார். போர்ச்சுக்கல் ஜாம்பவான் நுனோ கோம்ஸ், யூரோவில் அதிகபட்சமாக 7 கோல்களை அடித்துள்ளார்.
கூடிய விரைவில் நுனோவின் சாதனையை முறியடிப்பார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
செய்தி :: சாஹிப்...




No comments:
Write comments