2014-ல் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படத்திற்கு பிறகு இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் அவரது ‘கபாலி’ படம் வெளிவருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை, மலேசியா, பாங்காக் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. சமீபத்தில் இதற்கு ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்தார்.
மே 1-ந்தேதி இதன் ‘டீசர்’ ‘யூடியூப்’பில் வெளியிடப்பட்டு அதில் இடம் பெற்ற நெருப்புடா என்ற பாடல் வரியும் ரஜினி தன்னை கபாலிடா என்று வில்லனிடம் அறிமுகம் செய்யும் வசனமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் கபாலி 2 வது நெருப்புடா டீசரை நேற்றிரவு வெளியானது. இந்த் டீசர் இதுவரை 13 மணி நேரத்தில் சுமார் 13 லட்சம் பேர் இணையத்தில் பார்த்து ரசித்திருக்கின்றனர்.
செய்தி :: சாஹிப்...
வீடியோ:
No comments:
Write comments