Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 9, 2016

சூடு பிடிக்கும் 570 கோடி மேட்டர்...



திருப்பூரில் கண்டைனர் லாரியில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் தொடர்பாக தனது பதிலை 2 வாரத்திற்குள் அளிக்க வேண்டும் என சிபிஐற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் தேர்தல் சமையதில் கோவையிலிருந்து திரூப்பூர் வந்து கொண்டிருந்த 3 கண்டைனர்கள் லாரிகளை தேர்தல் பாதுகாப்பு துறையினர் சோதனைக்காக வழிமறித்த போது நிற்காமல் சென்ற மூன்று லாரிகளையும் மடக்கி பிடித்த போலிஸார் விசாரித்தபோது தகுந்த ஆவணங்கள் இன்றி ரூபாய் 570 கோடி கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாரிகள் பிடிக்கப்பட்டு 18 மணி நேரம் கழித்து பாரத ஸ்டேட் வங்கி அது தன்னுடைய பணம் தான் என்று கோரியது. அத்தோடு இப்பிரச்சனை பூசி முழுகப்பட்டது. அதே சமயம் இப்பிரச்சனையை விட்டுவிடாமல் தொடர்ந்து கொடச்சல் கொடுத்து வந்த திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்நதது.

திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த டி.கே.எஸ் இளங்கோவனின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. பணத்தை கொண்டு செல்லும்போது உரிய பாதுகாப்பு இல்லாமல் கொண்டு சென்றது, தமிழக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்காமல் சென்றது, போலியான ஆவணங்களை காண்பித்தது, பிடிபட்டு 18 மணி நேரம் கழித்தே தன்னுடைய பணம் என்று பாரத ஸ்டேட் வங்கி கோரியது போன்ற எண்ணற்ற சந்தேகங்கள் இதில் இருக்கிறது. தேர்தல் ஆணையமும் இப்பிரச்சனையை சிபிஐக்கு கொண்டு செல்லாமல் வருமான வரித்துறைக்கு எடுத்து சென்றுள்ளது என அம்மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா இது தொடர்பாக சிபிஐ தனது பதிலை இரண்டு வாரத்திற்குள் அளிக்க வேண்டும் என உத்தரவு பிரப்பித்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic