ஹிந்து ஜனஜகுருத்தி அமைப்பின் சார்பாக ஹிந்துசேவகர்களின் அனைத்து இந்திய கூட்டம் வருகின்ற ஜூன் 19 முதல் 25 வரை கோவாவில் வைத்து நடைபெறுவதாகவும் இதில் அயோத்தியில் இராமர் கோவில், பசுவதை தடைச்சட்டம் தொடர்பான விவாதங்கள் நடைபெற உள்ளதாக குருபிரஷாத் தெரிவித்தார்.
எங்களது இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவில் ஹிந்து ராஷ்டிராவை உருவாக்குவதுதான். அதற்காக ஹிந்துக்களை தயார் படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என இவ்வமைப்பின் கர்நாடகா ஒருங்கிணைப்பாளர் குருபிரஷாத் இன்று காலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். இந்தியா முழுவதிலிருந்து 425 பிரதிநிதிகள் மற்றும் அண்டை நாடுகளான நேபால், இலங்கை மற்றும் வங்கதேசத்திலிருந்தும் சில பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார். பா.ஜ.க ஆளும் மத்திய அரசின் உதவியோடு இந்துத்துவா அமைப்புகள் தற்போது பலம் பெற்று வருகிறது. எனினும் இந்துக்களின் பல கோரிக்கைகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவது தொடர்பான எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை, நாடு முழுவதும் பசுவதை தடைச்சட்டம் கொண்டு வரப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கஷ்மீரில் ஹிந்து பண்டிதர்களின் பிரச்சனை இன்னமும் தீர்க்கபடாமலேயே உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஹிந்து ஜனஜகுர்த்தி அமைப்பு மற்ற இந்து அமைப்புகளுடன் கைகோர்த்து ஹிந்துராஷ்டிராவை உருவாக்குவதற்கான பணிகளில் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Write comments