இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று அவர் பேசிய பேச்சு மத உணர்வுகளை புண்படுத்தக்கூடியது எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுஜன் முக்தி மோட்சா அமைப்பு சார்பாக சந்தீப் குமார் உத்தர்காண்ட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து இரு சமூகங்களிடையே வெறப்புணர்வு ஏற்படுத்தல், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
வி.ஹெச்.பியின் பெண் சாமியார் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பேசி வருகிறார். சமீபத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில் அவர் கூறும்போது காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்காக பல வேலைகளை செய்தோம். தற்போது இந்தியாவில் காங்கிரஸின் நிலை எதிர்பார்த்தது போலவே ஆகிவிட்டது. இனி முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும். அதற்காக நாம் வேலை செய்ய வேண்டும். ஆமிர் கான், ஷாருக்கான் போன்றவர்கள் பாகிஸ்தானிற்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்று பேசியிருந்தார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு முன்பும் சாத்வி பிராச்சி இதே போன்ற கருத்துக்களை வெளியிட்டுவந்தார். ஆனால் பா.ஜ.க தரப்பில் எந்த எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments