"ஈராக்" உலக நாகரீகத்தின் தொட்டிலாக இருந்த மிகச்சிறந்த நாடு, உலகத்தில் எண்ணெய் வளங்கள் கொண்ட நாடுகளில் ஒன்று. அத்தைகைய ஈராக்கை இன்று மனிதர்கள் வாழமுடியாத ஒரு பூமியாக உருவாகிவிட்டது. பலர் வரலாறு படிப்பார்கள், சிலர் எழுதுவார்கள் ஒரு சிலரால் மட்டுமே வரலாறு படைக்க முடியும் என்பதற்கு சதாம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
சர்வதிகாரி போக்கில் சதாம் நடந்து கொண்டாலும் தன் நாட்டு மக்களுக்கு நிறையவே செய்திருந்தார். தன்னந்தனியாக இரவிலே ஒரு இளம் பெண்ணை நடமாடவைக்க வேண்டும் என்பதே ஒரு இஸ்லாமிய ஆட்சியாளனின் இலட்சியமாக இருக்க வேண்டும். அந்த லட்சியத்தினை நிறைவேற்றிய மாபெரும் தலைவன் சதாம் ஹுசைன். அந்த அளவிற்கு சட்ட ஒழுங்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அரபு நாடுகளிலேயே ஒரு விசித்திரமான நாடு ஈராக். இந்தியாவைப்போன்று பல்வேறு இனக்குழுக்கள் வாழும் நாடாக ஈராக் இருந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் தாங்கள் ஈராக்கியர்களே என்று எண்ணும் அளவிற்கு தன் நாட்டுமக்களை வார்த்தெடுத்தார்.
2001 அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்படும் முன், அமெரிக்க இராணுவங்கள் ஈராக்கிற்கு நுழைவதற்கு முன், அந்நாடு ஒரு அமைதிப்பூங்காவாகவே இருந்தது. எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை சதாம் மீது சுமத்தி அந்நாட்டு மீதான் அக்கிரமத்தை கட்டவிழுத்துவிட்டது அமெரிக்கா. எதார்த்த நிலையை உற்று நோக்குவோமேயனில் அமெரிக்காவில் இருக்கும் ஆயுதங்களை வைத்து இந்த பூமிப்பந்தை 6 முறை முற்றிலுமாக அழித்துவிடாம், அந்தளவிற்கு ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்கா ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை வைக்கும்போது உலக நாடுகள் வேடிக்கைதான் பார்த்தது.
2003 ஈராக்கில் நடைபெற்ற போரில், பதுங்குக்குழியில் நிராயுதபாணியாக பிடிக்கப்பட்ட சதாம், இறுதியில் தூக்குக்கயிற்றை முத்தமிட்டார். அவர் கொல்லப்பட்ட பிறகு ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பது மட்டும் உலகிற்கு தெரியவில்லை மாறாக நாகரீகத்தின் தொட்டிலாக இருந்த ஈராக்கை ஆள சதாமால் மட்டுமே முடியும் என்பதும் உலகிற்கு தெரிந்தது.
சதாம் கனவிலும் நினைத்திறாத அளவிற்கு ஈராக் இன்று மாறிவிட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இன்று ஈராக்கையே நிலைகுழையச்செய்துவருகிறது. ஒரு இளம் பெண் தன்னந்தனியாக இரவில் சென்ற நாட்டில் இன்று நித்தம் நித்தம் குண்டுவெடிப்புகளும் கற்பழிப்புக்கொலைகளும் நடந்தேறிவருவதற்கு காரணம் யார்? சதாமை கொன்ற அமெரிக்காவா? அல்லது தற்போது இயங்கி வரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பா? அல்லது இருவருமேவா? என்பதை உலகம் நன்கறிந்திருக்கிறது. சதாம் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உருவெடுத்தே இருக்காது என்பதே சத்தியம். சதாமின் மரணத்தோடு பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்று தெரியவந்ததும் அந்நாட்டை விட்டு ஏன் இன்னும் அமெரிக்கா வெளியேறவில்லை என உலக நாடுகள் கேட்க, பதிலை தேடிய அமெரிக்க இஸ்ரேலோடு கைகோர்த்து உருவாக்கிய அமைப்பே ஐ.எஸ்.ஐ.எஸ் என்கிற பயங்கரவாத அமைப்பு.
இன்று வரை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்போடு போராடுகிறோம் என்கிற பெயரில் தொடர்ந்து எண்ணெய் வளங்களை சுறண்டுகிறது அமெரிக்கா. புரட்சியின் மூலம் ஆட்சியை பிடித்து, படையெடுப்பின் மூலம் ஆட்சியை இழந்து அநீதியின் மூலம் கொல்லப்பட்டவராகிவிட்டார் சதாம் ஹுசைன். சர்வதிகாரிகளாக செயல்பட்ட எத்துனையோ பேரின் முடிவுகள் செயற்கையாக அமைந்துவிட்டாலும் அதிலும் கூட ஒரு விதிவிலக்காகிவிட்டார். தன்னுடைய இறுதி மூச்சின் போது அவரது கண்ணில் துளியளவும் தெரியாத மரண பயம், அவரை தூக்கிலிட்டவர்களையே மிரளவைத்தது என்பதுதே நிஜம்.
ஈராக் மக்களுக்காகவே அமெரிக்காவை ஆதரித்த சதாம், தன் மக்களுக்காகவே எதிர்க்கவும் துணிந்தார். மற்ற நாடுகள் அனைத்து தனது நாட்டின் எண்ணெய் வளங்களை தனது குடும்ப சொத்தாக்கி கொண்ட போது அதனை தேசிய மயமாக்கினார் சதாம். வாழும் போதே அறை நூற்றாண்டுகாலம் பேசப்பட்ட மனிதர் சதாம் வாழ்ந்த பிறகும் உலகம் முழுவதும் பேசப்படும் மனிதராகிவிட்டார்.
- முத்து

No comments:
Write comments