திமுகவிலிருந்து விலகிய வைகோ மதிமுக கட்சி துவங்கிய காலம் முதலே அக்கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளராக இருந்து செல்வாக்குடன் இருந்தவர் மணிமாறன். தென்சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியிருக்கிறார். வைகோவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நிர்வாகிகளில் இவரும் ஒருவர்.
இன்று சென்னை அறிவாலயத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த மணிமாறன் திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து தனனை திமுகவில் இணைத்துக்கொண்டார். அவரை பொன்னாடை போர்த்து ஸ்டாலின் வரவேற்றார். ஆர்.எஸ் பாரதி, மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், நடிகர் சந்திரசேகர், இந்திரா நகர் ரவி, சேகர், பாலவாக்கம் விசுவனாதன் உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மணிமாறனுடன் மதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன்ராஜ், புருஷோத்தமன், பி.டி. சேகர், செக்கல் ஸ்ரீராம், செல்வகுமார், பிரவீன், எஸ்.கமல் உட்பட 75கும் மேற்பட்டோர் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இன்னும் சில நாட்களில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்களை திரட்டி அவர்களையும் திமுகவில் இணைக்கப்போவதாக தெரிவித்தனர். இதனையடுத்து மணிமாறன் கூறும்போது வைகோவின் போக்கு தங்களுக்கு பிடிக்கவில்லை எனவும், அவரது அரசியல் செயல்பாடுகள் சரியில்லை எனவும் குற்றஞ்சாட்டினர். இனி அவரை நம்பி மதிமுகவில் இருக்க முடியாது என்பதால் தாய் கழகமான திமுகவில் இணைந்துவிட முடிவெடுத்ததாக தெரிவித்தார். மணிமாறன் கட்சியை விட்டு விலகியது அக்கட்சிக்கு பெருத்த இழப்பு என மதிமுக மத்தியில் பேசப்பட்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Write comments